📢 நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்! கல்வி பிரதியமைச்சர் அறிவிப்பு
🌧️ சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (ஒக்டோபர் 28) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி பிரதியமைச்சர் மதுர செவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சு நேற்று (ஒக்டோபர் 27) அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாளை (28) முதல் பாடசாலைகள் வழமைபோன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய செய்திகள், கல்விச் செய்திகள் மற்றும் உடனுக்குடன் வெளியாகும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள கீழுள்ள Link ஐ Click செய்து எமது WhatsApp குழுவில் இணைந்துகொள்ளுங்கள். 👇 https://chat.whatsapp.com/DnKmjd2XGOxE7apVSURKpd?s=cl&p=a&mlu=4&ilr=4&iam=2
