📚 ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி!
கல்விப் பட்டம் (B.Ed.) பெற்ற பட்டதாரிகளை மாகாணப் பாடசாலைகளில் ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
✅ இந்த ஆண்டின் இறுதிக்குள் நேர்முகத் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🏫 தனியார் பல்கலைக்கழக B.Ed. பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு!
சில நிபந்தனைகளின் அடிப்படையில் தனியார் பல்கலைக்கழகங்களில் கல்விப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி பெறலாம்.
📌 முக்கிய தகுதிகள்:
1️⃣ நான்கு வருட பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
2️⃣ இணையவழிக் கல்வி முறையின்றி பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
3️⃣ அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலையில் 10 வார கற்பித்தல் பயிற்சியைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
📍 மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஆட்சேர்ப்பு செய்திகள், விண்ணப்ப அறிவிப்புகள் மற்றும் கல்வி தொடர்பான புதிய தகவல்களைப் பெற கீழுள்ள Link ஐ Click செய்து எமது WhatsApp குழுவில் இணையுங்கள். 🔗👇https://chat.whatsapp.com/HYSf9ofQEYFJzr7ftku6M3?s=cl&p=a&mlu=4&ilr=4
🙏 இந்தத் தகவல் தகுதியுள்ள B.Ed. பட்டதாரிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். பகிர்ந்து உதவுங்கள்! 📲
